மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
25-May-2025
ஈரோடு, பெங்களுருவை தலைமையிடமாக கொண்ட 'கிரெடிட் ஆக்டிஸ் கிராமின் லிமிடெட்' நிறுவனத்தின் கிளை, கொடுமுடியில் செயல்படுகிறது. இந்நிறுவனம் மகளிர் குழுக்கடன், தனி நபர் கடன் வழங்கி வருகிறது. நிறுவனத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த கோகுல், 30, மேலாளராக பணிசெய்தார். இவர், 46 வாடிக்கையாளர்களின் கடன் ஆவணங்களின் மீதும், கடன் தொகை செலுத்தியவர்களின் பணம் என, 27 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். இதுபற்றி வாடிக்கையாளர் தரப்பில் நிறுவனத்துக்கு புகார் போனது. இதை தொடர்ந்து நிறுவன கோட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கணக்கை ஆய்வு செய்தபோது, 27 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது. இதுபற்றி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தரப்பட்டது. விசாரித்த போலீசார் கோகுலை கைது செய்தனர்.
25-May-2025