வனப்பகுதியில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்
சென்னிமலை, சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் வசிப்பவர் ரஞ்சித், 30; வீட்டு குப்பையை, சென்னிமலை வனச்சரகம் காப்பு காட்டு பகுதியான ஊத்துக்குளி ரோடு, வயக்காடு வனசரக பகுதியில் கொட்டினார். அங்கு ரோந்தில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.கடந்த மாதங்களிலும் காங்கேயம் ரோட்டில் வனச்சரக பகுதியில் குப்பை கொட்டிய நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனாலும் வனப்பகுதிக்குள் குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை என்று சமூக நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.