அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்
சத்தியமங்கலம்; சத்தியமங்கலம் வட்டார போக்குவரத்து அலுவ-லர்கள், திம்பம் மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களில் நேற்று திடீர் சோதனை செய்தனர். இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பாரம் ஏற்றி வந்த நான்கு கனரக வாகனங்களுக்கு, 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். இது-போன்ற வாகனங்கள்தான் மலைப்பாதையில் செல்ல முடியாமல் விபத்தை சந்திக்கின்றன. பெயரளவுக்கே சோதனை நடந்ததாக வாகன ஓட்-டிகள் அடைந்தனர். அதேசமயம் தங்கள் மாமூ-லுக்கு வேட்டு வைத்து விட்டனரே என்று, வனத்-துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.