உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிரியாணி கடையில் தீ

பிரியாணி கடையில் தீ

ஈரோடு: ஈரோடு, அகில்மேடு மெயின் வீதியில் ஈரோ பிரியாணி கடை உள்-ளது. இங்கு நேற்று காலை, 10:20 மணியளவில் வர்த்தக காஸ் சிலிண்டரை ரெகுலேட்டரில் இருந்து கழற்றி வேறு சிலிண்ட-ருக்கு மாற்றியபோது, ரெகுலேட்டரில் இருந்த பின் சிலிண்டரில் சிக்கியது. இதனால் காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.சிலிண்டரின் மேல் பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. விரைந்து சென்ற ஈரோடு தீயணைப்பு துறை-யினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து, 10 நிமிடத்தில் சிலிண்டரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி