உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகை கடையில் தீ விபத்து

நகை கடையில் தீ விபத்து

ஈரோடு, ஈரோட்டில் பொன் வீதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நகை கடை உள்ளது. இங்கு நேற்று மதியம், 3:05 மணியளவில் நகையை உருக்கும் வேலைக்காக சிறு காஸ் சிலிண்டரை பயன்படுத்தி உள்ளனர். அப்போது சிலிண்டர் டியூப் கழன்று விழுந்து கேஸ் கசிந்து தீப்பற்றியது. இதில் மின் மீட்டர் உள்ளிட்ட பொருட்கள், மேற்கூரை முழுமையாக தீக்கிரையாகின. கடை ஊழியர்கள் தீயணைப்பானை கொண்டு தீயை அணைக்க முற்பட்டனர். அம்முயற்சி தோல்வி அடைந்ததால் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு, 3:25 மணிக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சென்று, 10 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால் பொன் வீதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயால் நாசமான பொருட்கள் சேதாரம் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை