மேலும் செய்திகள்
மாற்று திறனாளி வீட்டில் எலியால் தீ விபத்து
26-Feb-2025
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் கருப்பையா. வீட்டு முன்புறம் பழைய பொருட்கள், பேப்பர் வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை பழைய பொருட்கள் வைத்திருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை அதிகளவில் வெளியேறவே, அக்கம்பக்கத்தினர் பார்த்து ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஒன்றரை மணி நேரம் போராடி தீயணைப்பு நிலைய வீரர்கள் அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. யாருக்கும் தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை.
26-Feb-2025