உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முட்புதரில் தீ விபத்து

முட்புதரில் தீ விபத்து

ஈரோடு:ஈரோடு டீச்சர்ஸ் காலனி கோவலன் இரண்டாவது வீதியில், தனியாருக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பிலான காலியிடம் உள்ளது. அங்கு முட்செடி, புல், மரம், செடி-கொடி நிறைய வளர்ந்திருந்தது.நேற்று காலை, 10:50 மணியளவில் புற்களில் தீப்பிடித்த நிலையில் பரவி முட்செடிகள், மரம், செடி-கொடிகள் தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். அணைக்கப்படாத பீடி, சிகரெட்டை வீசி எறிந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி