உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பட்டாசு விற்கக்கூடாது

அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பட்டாசு விற்கக்கூடாது

'அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்பட்டாசு விற்கக்கூடாது'ஈரோடு, அக். 18-தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைத்துள்ள விற்பனையாளர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.நிரந்தர, தற்காலிக பட்டாசு கடை விற்பனையாளர்கள், உரிமதாரர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். கல்யாண மண்டபம், காஸ் குடோன், பெட்ரோல் பங்க், அதிக அழுத்தமுள்ள மின்சா ஒயர்கள் செல்லுமிடம், மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களில், அடுக்கு மாடி குடியிருப்பின் கீழும் கடை வைக்க அனுமதி இல்லை. தரைத்தளம் தவிர மாடிகள், நிலவறைகளில் பட்டாசு சேமிக்கக்கூடாது. வெளியேற, 2 வழிகள் தேவை. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு நிலையங்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை