உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிநாள் நிதி வசூல் துவக்கம்

கொடிநாள் நிதி வசூல் துவக்கம்

ஈரோடு: முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், படைவீரர் கொடிநாள் நிதி வசூல் செய்யும் பணியை, ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் நேற்று துவக்கி வைத்தார். முன்னாள் படைவீரர்களின் சிறார் ஐந்து பேருக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினார். முன்னாள் படை வீரர் தேவராஜனின் பேத்திகள் தேவதர்ஷினி, லாவண்யா ஆகியோர் இந்திய சுதந்திர போராட்டம் தொடர்பாக வரைந்த பல்வேறு ஓவியங்களை, டி.ஆர்.ஓ.,விடம் காட்டி வாழ்த்து பெற்-றனர். கதிரம்பட்டியை சேர்ந்த லோகநாதன், தனிப்பட்ட முறையில் வசூலித்த கொடி நாள் நிதியை வழங்கினார். முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் புஷ்பலதா, பிரிகே-டியர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி