செல்லாண்டியம்மன் கோவிலில் கொடியேற்று விழா கோலாகலம்
கோபி, ஜன. 2-குண்டம், தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோபி அருகே அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவிலில் கொடியேற்று விழா நேற்று நடந்தது.கோபி அருகே அளுக்குளியில், செல்லாண்டியம்மன் கோவில் குண்டம், தேர்த்திருவிழா, கடந்த, 20ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று கொடியேற்று விழா நடந்தது. முக்கிய நிகழ்வான, பக்தர்கள் பூமிதிக்கும் குண்டம் திருவிழா, இன்று (ஜன.,2ல்) காலை 6:00 முதல், 7:00 மணிக்குள் நடக்கிறது. இதனால் அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி குண்டத்தில், எரிக்கரும்பு எனும் ஊஞ்சமர கட்டைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அளுக்குளி பகுதியில் விழாக்கோலம் பூண்டுள்ளது.