உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவிரியில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

காவிரியில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

ஈரோடு, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணை பாதுகாப்பு கருதி நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணையில் இருந்து 90,000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதேபோல், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, 5,396 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், இந்த நீரும் காவிரி ஆற்றில் கலக்கிறது.இதன் காரணமாக, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி, தண்ணீர் செல்கிறது. அதேசமயம், தொடர் நீர்வரத்து காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும், சுழல்களில் சிக்கி கொள்ளும் அபாயமும் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், மேடான இடங்களுக்கு செல்ல வேண்டும், ஆபத்தான வகையில் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.* மேட்டூர் அணை ஐந்தாவது முறையாக நடப்பாண்டு நிரம்பி, அணையில் இருந்து, 94 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று மதியம் காவிரி ஆற்றில் வெளியேறியது. இதனால், பவானியில் காவிரி ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டவாறு பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே பொதுமக்கள், ஆற்றின் கரையோர பகுதியில் நின்று மொபைல்போனில் படம் பிடித்தனர்.* பவானியில் பிரசித்திபெற்ற கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. ஏராளமானோர் தினமும் வந்து முக்கூடலில் குளித்து, சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நேற்று கூடுதுறையில் பக்தர்களுக்கு குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்காமல் இருப்பதற்காக, தகரசீட்டுகள் மற்றும் இரும்பு பைப்கள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை