உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷன் கடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

ரேஷன் கடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

புன்செய்புளியம்பட்டி :புன்செய்புளியம்பட்டி நகராட்சி, 13வது வார்டு காந்திநகரில் நீலகிரி எம்.பி., மேம்பாட்டு நிதியில், நியாய விலை கடை அமைக்க, 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் நல்லசிவம் பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி துணைத்தலைவர், செயல் அலுவலர், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி