உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்ப்பு பெருந்துறை யூனியன் மீது கொதிப்பு

ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்ப்பு பெருந்துறை யூனியன் மீது கொதிப்பு

ஈரோடு, பெருந்துறை யூனியன், கோமையன்வலசு பஞ்., ஒன்பதாவது வார்டை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: கோமையன்வலசில் இருந்து நல்லாம்பட்டி செல்லும் சாலையில் சீரமைப்பு பணி நடக்கிறது. அவ்விடத்தில் முறையான கழிவு நீர் வடிகால் வசதி செய்து கொடுக்காததால், சாலையிலேயே கழிவு நீர் செல்கிறது. ஆரம்பம் முதல் வடிகால் வசதி செய்துவிட்டு சாலை அமைக்க வேண்டும். இதுபற்றி பாண்டியம்பாளையத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் மனு வழங்கியும், நடவடிக்கை இல்லை. இதற்கிடையில் கால்வாய் அமைக்கப்படும் இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக யூனியன் அலுவலர்கள் செயல்பட்டு, கழிவு நீர் வாய்க்கால் அமைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் விசாரித்து, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி முறையான கழிவு நீர் வசதி செய்து சாலையை முழுமைப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை