உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

காங்கேயம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காங்கேயம் டி.எஸ்.பி., அலுவலகத்தில், சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. காங்கேயம் ஏ.எஸ்.பி., அர்பிதா ராஜ்புட் தலைமை வகித்தார். சிலைகள் கரைக்க செல்ல கொடுக்கப்பட்ட பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீப்பற்றும் உபகரணங்களை பயன்படுத்தக்கூடாது. மது அருந்தி விழாவில் கலந்து கொள்ளக்கூடாது. சிலைகளை கரைக்க நீர்நிலைக்குள் யாரும் இறங்கக் கூடாது. தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மட்டுமே கரைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் காங்கேயம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போக்குவரத்து போலீசார் மற்றும் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை