மேலும் செய்திகள்
கீழ்பவானி வாய்க்காலில் சிலை கரைக்க தடை கோரி மனு
03-Aug-2025
ஈரோடு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் சுப்பு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தற்போது பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள், மக்கள் சார்பில் ஆங்காங்கு விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.இச்சிலைகளை பண்டிகை முடிந்து, நீர் நிலைகளில் கரைப்பர். குறிப்பாக சிலைகளை கீழ்பவானி கால்வாயில் கரைக்க அனுமதிக்கக்கூடாது. கால்வாயில் கரைத்தால், அதில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரை மாசுபடுத்தும். சிலையுடன் துாக்கி வீசப்படும் பல்வேறு பொருட்கள், மதகுகளை அடைத்து, நீரோட்டத்தை தடுக்கும். முழுமையாக மண்ணால் கட்டப்பட்ட இந்த கால்வாய், மதகுகள் மிகவும் பலவீனம் அடையும் அபாயம் ஏற்படும். கடந்தாண்டு போல கீழ்பவானி கால்வாயில் சிலைகளை கரைக்க அனுமதி தரக்கூடாது.மாவட்ட நிர்வாகம், போலீசார் இணைந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
03-Aug-2025