உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சூதாட்டம் 5 பேர் கும்பல் கைது

சேவல் சூதாட்டம் 5 பேர் கும்பல் கைது

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் போலீசார் ராஜன்நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முருங்கை தோப்பில் சேவல் சூதாடிய சிலரை சுற்றி வளைத்தனர்.ஈரோடு கொல்லம்பாளையத்தை கவுசிக், 27; கதிரம்பட்டி விக்ரம், 32; மயிலம்பாடி முத்து, 50; கே.என்.பாளையம் மூவேந்திரன், 22; வெள்ளியம்பாளையம் தீபன், 35, என ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களிடம், 42,000 ரூபாய், 20 டூவீலர், இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ