உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

புளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை கூடுகிறது. நேற்று நடந்த சந்தைக்கு, 250க்கும் மேற்பட்ட வெள்ளாடு, 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதேசமயம் ஆடுகளின் விலை, 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் விற்பனை மந்தமாக காணப்பட்டது. வழக்கமாக பக்ரீத் பண்டிகை சமயத்தில் சந்தையில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடக்கும். தற்போது ஆடுகள் வரத்து இருந்தும், விலை உயர்ந்ததால் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் இருப்பதால், அடுத்த வாரம் ஆடு விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை