சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடமாடி திரியும் ஆடுகளால் இடையூறு
பு.புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பலர் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல், காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அதுவாகவே மேய்ந்து முடிந்து வயிற்றை நிரப்பி மாலையில் வீடுகள் திரும்புகின்றன. இதுபோன்ற புத்திசாலி கால்நடை வளர்ப்போர்களால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்தான் திண்டாடி போகின்றனர்.சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலை, அரசு சுகாதார நிலையம், நேருநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஆடு, மாடுகள் சாலையில் நடமாடி திரிவது அதிகரித்து விட்டது. மேய்ந்தபடியே தேசிய நெடுஞ்சாலையை திடீரென கடப்பதால், கனரக வாகன ஓட்டிகள் கொஞ்சமாகவும், டூவீலர்களில் செல்வோர் அதிதமாகவும் தடுமாறுகின்றர். இதில் ஒரு சிலர் விபத்தில் சிக்கவும் நேரிடுகிறது. கால்நடைகளுக்கும் காயம் ஏற்படுகிறது. இதுபோன்று ஆடு, மாடுகளை அவிழ்த்துவிடும் உரிமையாளர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.