அரசு ஊழியர்கள் ஆலோசனை
ஈரோடு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலர் விஜய மனோகரன் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வரும், 9ல் தேசிய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை ஆதரிக்க முடிவு செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோவில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் முழுமையாக பங்கேற்க வேண்டும். ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.