அரசு மருத்துவ கல்லுாரி ஆண்டு விழா
பெருந்துறை: பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரியில், ஆண்டு விழா மற்றும் முத்தமிழறிஞர் மாணவர் மன்ற பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழபை்பாளராக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார். விழாவில் பரிசு வழங்கி அவர் பேசியதாவது: இங்கு, 23 உயர் சிறப்பு மருத்துவ துறை, 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி, மருந்தகம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. 60 மாணவர்களுடன் தொடங்கிய கல்லுாரியில், 150 மாணவர் சேர்க்கைக்கான பணி நடந்து வருகிறது. இவ்வாறு பேசினார். முன்னதாக ஈரோடு ரோட்டரி சங்கத்தின் சார்பில் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மருத்துவ உபகரணங்களை, அமைச்சர் தொடங்கி வைத்தார்.பல்கலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, 24 மாணவ, மாணவியர், முத்தமிழறிஞர் தமிழ் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.