உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குரங்கன்பள்ளம் ஓடை ரூ.15 கோடியில் புனரமைக்க அரசாணை வெளியீடு

குரங்கன்பள்ளம் ஓடை ரூ.15 கோடியில் புனரமைக்க அரசாணை வெளியீடு

ஈரோடு:குரங்கன் ஓடை பாசன கட்டமைப்பை, 15 கோடி ரூபாயில் புனரமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, அனுமன்பள்ளியில் இருந்து தேவனாம்பாளையம் கிராமத்தில், குரங்கன்பள்ளம் ஓடை (அனுமன் நதி) உற்பத்தியாகிறது. இந்த ஓடை, 39 கி.மீ., சென்று, கொடுமுடி தாலுகா, வெங்கம்பூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இது, மானாவாரி இயற்கை ஓடையாகும். வடகிழக்கு பருவமழையின் போதும், கீழ்பவானி வாய்க்கால் திறக்கப்பட்டதும் கசிவு நீராலும் நீரோட்டம் பெறுகிறது.2,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் வரை கசிவு நீரும், பின் மழை நீரும் வரத்தாகும். குரங்கன் ஓடையின் குறுக்கே வெள்ள நீர், கசிவு நீரை தேக்கி பயன்படுத்த, 7 தடுப்பணைகள் உள்ளன. இந்த ஓடை மூலம், மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 9,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஓடையில் பல இடங்களில் தடுப்பணைகளில் கசிவு ஏற்பட்டு, தண்ணீரை சேமிக்க முடியவில்லை. நீரோட்ட பாதையில் வண்டல் மண் படிந்தபடியும், செடி, கொடி, புதர்கள், ஆகாய தாமரைகள் வளர்ந்து நீரோட்டத்தை தடுக்கிறது. இதனால், மழைக்காலங்களில் அதிக நீர் வரும்போது, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது. மேலும், ஓடையின் பாசன கட்டமைப்பை புனரமைக்க, நீர் வளத்துறை அரசுக்கு பரிந்துரைத்தது.இதுபற்றி, நீர் வளத்துறையினர் கூறியதாவது:கடந்த டிச., 20ல், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு வந்தார். அப்போது, குரங்கன்பள்ளம் ஓடையை புனரமைக்க, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, அறிவிப்பு வெளியிட்டார். அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நிறைவு பெற்று, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க உள்ளன. இப்பணிகள் நிறைவு பெற்றால், மழை நீர், கசிவு நீரும் வீணாகாமல் பாசனத்துக்கு சென்றடையும். வெள்ளப்பெருக்கு ஏற்படாது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ