உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பனியன் நிறுவன பஸ் மோதி அரசுப்பள்ளி மாணவி பலி

பனியன் நிறுவன பஸ் மோதி அரசுப்பள்ளி மாணவி பலி

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ், 40, எலக்ட்ரீசியன். இவரின் மகள் ஷயிலேஷினி, ௧௧; தொட்டம்பாளையம் அரசு பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி. நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று மிட்டாய் வாங்கியவர், வீட்டுக்கு திரும்பினார். பவானிசாகர்-பண்ணாரி சாலையில், காமராஜ் நகர் பாலம் அருகே சாலையை கடந்தபோது, அதிவேகமாக வந்த திருப்பூர் தனியார் (எஸ்.சி.எம்., டெக்ஸ்) பனியன் நிறுவன பஸ் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அதேசமயம் விபத்து காரணமாக பஸ் நிலை தடுமாறி சாலையோர தடுப்புகளின் மீது மோதி பள்ளத்தில் இறங்கி நின்றது. பவானிசாகர் போலீசார் மாணவி உடலை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பஸ் டிரைவரான சத்தியமங்கலத்தை சேர்ந்த கோபால்சாமியிடம், 35, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேகத்தடை தேவைஅதி வேகமாக பஸ் வந்ததே விபத்துக்கு காரணம். இப்பகுதி வழியாக தேங்காய் மட்டை ஏற்றி செல்லும் லாரிகள், அதிவேகத்தில் செல்கின்றன. எனவே வேகத்தை கட்டுப்படுத்த இப்பகுதியில் பேரிகார்டு வைக்க வேண்டும். நிரந்தர தீர்வாக வேகத்தடை அமைக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். விபத்தை தொடர்ந்து காமராஜ் நகர் பாலம் அருகில், போலீசார் பேரிகார்டு வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை