மேலும் செய்திகள்
இன்றும் நாளையும் 40 சிறப்பு பஸ் இயக்கம்
25-Jan-2025
அந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே வெள்ளாளபாளையம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்க, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் மற்றும் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலத்திடம், மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் கவுந்தப்பாடி டெப்போவில் இருந்து, 9-ம் எண் கொண்ட டவுன் பஸ் இயக்கம் நேற்று தொடங்கியது. வெள்ளாளபாளையத்தில் இருந்து பஸ் இயக்கத்தை எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ் தினமும் காலை, 9:25 மணிக்கு கூத்தம்பூண்டியில் புறப்படும். கோபி செல்லும் போது ரைஸ் மில்லில் இருந்து வெள்ளாளபாளையம் வரை செல்லும். அங்கிருந்து மீண்டும் ரைஸ்மில், ஆப்பக்கூடல் வழியாக கவுந்தப்பாடி செல்லும். காலை ஒரு முறை மட்டுமே வந்து செல்லும்.மீண்டும் கவுந்தப்பாடி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதியம், 2:20 மணிக்கு கே-10 டவுன் பஸ், ஆப்பக்கூடல், ரைஸ்மில், வெள்ளாளபாளையம், முனியப்பன்பாளையம் வழியாக அந்தியூர் செல்லும். மீண்டும் இரவு, 7:00 மணிக்கு அந்தியூரில் இருந்து அதே வழித்தடத்தில் கவுந்தப்பாடி செல்லும். இந்த பஸ், மதியம் மற்றும் இரவு என இருமுறை இயக்கப்படும் என்றும், போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
25-Jan-2025