மேலும் செய்திகள்
ஈரோடு எஸ்.பி.,யாக சுஜாதா பொறுப்பேற்பு
29-Mar-2025
சத்தியமங்கலம் : தாளவாடி மலை கிராமத்தில் பாட்டி, பேரன் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம், தாளவாடி மலையில் உள்ள தொட்டகாஜனுார் மலை கிராமத்தை சேர்ந்த சிவண்ணா - சிக்கம்மா, தம்பதியரின் மகள் தொட்டம்மா. இவரது மகன் ராகவன், 12; சூசைபுரம் அரசு பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன். தாய் சிக்கம்மா வீட்டில் இருந்து, 10 வீடுகள் தள்ளி தொட்டம்மா வசிக்கிறார். இரவில் பாட்டியுடன், ராகவன் துாங்குவது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பாட்டியுடன் துாங்க சென்றான். நேற்று காலை வெகு நேரமாகியும் இருவரும் வெளியே வராததால், பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, பாட்டி, பேரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். தாளவாடி போலீசார், ஈரோடு எஸ்.பி., சுஜாதா விரைந்தனர். உறவினர்கள் எஸ்.பி.,யை முற்றுகையிட்டு, உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். பதற்றமான சூழல் ஏற்பட்டதால், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இரட்டை கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
29-Mar-2025