மேலும் செய்திகள்
40 கிலோ குட்கா பறிமுதல் சிதம்பரத்தில் மூவர் கைது
25-Sep-2024
குட்கா கடத்தல் 2 பேர் கைது
16-Sep-2024
அந்தியூர்: பர்கூர் அருகே, ரூ.9.23 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்-களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.பர்கூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, பர்கூர் மயானம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சுராஜ் மஸ்தா மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சக்தியமங்கலம் அருகே கரட்டூரை சேர்ந்த விக்னேஸ்வரன், 31, ஸ்ரீநாத், 31, ஆகியோர் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் உள்ள சங்கர் என்பவரிடமிருந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரி-யவந்தது. இதன் மேல், சர்க்கரை மூட்டைகளை வைத்து மறைத்து கொண்டு, சக்தியமங்கலத்துக்கு வருவது தெரியவந்தது. இதனையடுத்து பர்கூர் போலீசார், மினிலாரி, அதில் கடத்தி வரப்-பட்ட 1,220 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், விமல் பாக்கு, கூலிப் என, 113 மூட் டைகளையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 9.23 லட்சம் ரூபாய். விக்னேஸ்வரன், ஸ்ரீநாத் ஆகி-யோரை பர்கூர் போலீசார் கைது செய்தனர்.
25-Sep-2024
16-Sep-2024