உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடையில் குட்கா பறிமுதல் தி.மு.க., நிர்வாகி கைது

கடையில் குட்கா பறிமுதல் தி.மு.க., நிர்வாகி கைது

பவானி:ஆப்பக்கூடல் காமராஜர் காலனியை சேர்ந்தவர் செல்வன், 56; ஆப்பக்கூடல் பேரூர் தி.மு.க., துணை செயலாளர். அதே பகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின்படி, ஆப்பக்கூடல் போலீசார் சோதனை செய்தனர். இதில், 4 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.* பவானி அருகே மேட்டுநாசுவன்பாளையத்தில் வீட்டில் வைத்து, குட்கா புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த பிரகாஷை, 30, சித்தோடு போலீசார் கைது செய்து, 41 கூல்-லிப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !