தாமரைக்கரையில் ஆலங்கட்டி மழை
அந்தியூர், அந்தியூர் அருகேயுள்ள, பர்கூர் அடுத்த தாமரைக்கரை சுற்று வட்டார பகுதிகளான ஈரட்டி, கடை ஈரட்டி, தேவர்மலை, பெஜ்லட்டி, மடம் உள்ளிட்ட இடங்களில், நேற்று மாலை 5 மணிக்கு கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையின் போது, தாமரைக்கரை உட்பட சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.