உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகாவீர ஆஞ்சநேயருக்கு 30ல் அனுமன் ஜெயந்தி விழா

மகாவீர ஆஞ்சநேயருக்கு 30ல் அனுமன் ஜெயந்தி விழா

மகாவீர ஆஞ்சநேயருக்கு 30ல் அனுமன் ஜெயந்தி விழாஈரோடு, டிச. 26-ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மகாவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு சுயம்பு மூர்த்தியாக உள்ள ஆஞ்சநேயருக்கு, ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு அனுமன் ஜெயந்தி விழா வரும், 30 கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு மகா கணபதி அபிஷேகம், 4:00 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், 5:00 மணிக்கு மலர் அலங்கார தரிசனம், மதியம் 1:30 மணிக்கு மூலவருக்கு வடை மாலை சாற்றுதல், 4:00 மணிக்கு வெள்ளி கவசம் சாற்றுதல், 6:00 மணிக்கு தங்க கவசம் சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்படும். வார வழிபாட்டு குழு சார்பில் வரும் 29 மாலை 5:00 மணிக்கு அனுமன் ஊர்வலம் வ.உ.சி. பூங்காவில் இருந்து துவங்குகிறது. பார்க் ரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, தெப்பகுளம் வீதி, தில்லை நகர், மேட்டூர் சாலை, முனிசிபல் காலனி ரோடு, பாரதி தியேட்டர் வீதி, காவிரி ரோடு வழியே கோவிலை வந்தடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி