உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3 லட்சம் மதிப்பிலான வைக்கோல் போர் தீக்கிரை

ரூ.3 லட்சம் மதிப்பிலான வைக்கோல் போர் தீக்கிரை

ஈரோடு:ஈரோடு பெரிய சேமூர் வேளாண் நகர் வசந்தம் வேலாம்மாள் சிட்டியை சேர்ந்தவர் பிரபு, 43; இவரது வீட்டில், 580 வைக்கோல் கட்டுக்கள் அடங்கிய போர் அமைத்திருந்தார். நேற்று அதிகாலை வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சேதமாகி விட்டது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி