உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் காற்றுடன் கனமழை

ஈரோட்டில் காற்றுடன் கனமழை

ஈரோடு: புயல் சின்னத்தால் ஈரோட்டில் சில நாட்களுக்கு முன் மழை பெய்தது. அதன் பின் மழையின்றி குளிர் நீடிக்கிறது. நேற்று பகலில் பனி நிலவிய போதும், அதிகமான வெயிலும் இருந்தது. மாலை, 6:45 மணி முதல் இரவு, 7:30 மணி வரை காற்றுடன் பலமான மழை பெய்தது. அதை தொடர்ந்தும் லேசான துாரல் அவ்வப்போது பெய்தது. இரவில் வழக்கமான பனியுடன், மழையால் மேலும் குளிர்ந்த நிலை நீடித்தது.*பெருந்துறை பகுதியில் நேற்று மாலை, 6:30 மணியளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இரவு, 7:௦௦ மணி வரை பெய்தது. இதனால் சூடு தணிந்து இரவில் லேசான குளிர் காற்று வீசியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை