மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 330 மனுக்கள் ஏற்பு
12-Aug-2025
ஈரோடு:ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.தொழிலாளர் துறை சார்பில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம், வனத்துறை சார்பில் டவுன் பஞ்.,களுடன் இணைந்து ஈர நிலங்கள் குறித்த வலை தள பதிவேற்றம், மருத்துவத்துறை சார்பில் பிறப்பு, இறப்பு பதிவில் பெற்றோரின் ஆதார் விபரங்களை மென்பொருளில் இணைத்தல் என ஒவ்வொரு துறையிலும் புதிதாக மேற்கொள்ளப்படும் திட்டங்களை விரைவுபடுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது.அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்குகள், சாலை மேம்பாடு போன்றவற்றை தேவையான இடங்களில் விரைவாக செயல்படுத்த அறிவுறுத்தினர்.
12-Aug-2025