உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பஸ் மீது மோதிய அதிவேக பூ வாகனம்

அரசு பஸ் மீது மோதிய அதிவேக பூ வாகனம்

புன்செய்புளியம்பட்டி, கோவையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன், பாயிண்ட் டு பாயிண்ட் அரசு பஸ் நேற்று புறப்பட்டது. டிரைவர் நடராஜன் ஓட்டினார். புன்செய் புளியம்பட்டி அடுத்த விண்ணப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே காலை, 10:௦௦ மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.எதிர் திசையில் கோவை நோக்கி பூ பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் வந்த பிக்-அப் வாகனம் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்று, அரசு பஸ் மீது நேருக்குநேர் மோதியது. விபத்தில் பிக்கப் வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. பஸ் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பிக்-அப் வாகன டிரைவர் பிரவீன், 30, என்பவரை பிடித்து, புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். பூக்கள் ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்கள், வழக்கமாகவே அதிவேகத்தில் பயணிக்கின்றன. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை