உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடத்தி வரப்பட்ட வேன் ஜி.பி.எஸ்.,சால் மீட்பு

கடத்தி வரப்பட்ட வேன் ஜி.பி.எஸ்.,சால் மீட்பு

காங்கேயம்: தேனி மாவட்டம் கூடலுாரை சேர்ந்தவர் ராஜா முகமது, 44; சொந்தமாக பொலிரோ பிக்கப் வேன் வைத்து தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு வேனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீசில் புகாரளித்தார். அதேசமயம் வேனில் ஜி.பி.எஸ்., இயந்திரம் பொருத்தியிருந்தார். இதன் அடிப்படையில் கண்காணித்தபோது, காங்கேயத்தை அடுத்த படியூர் பகுதியில் வேன் நேற்று ஒரு கடையில் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். அங்கு விரைந்த ராஜாமுகமது வேனை சிறைபிடித்து, காங்கேயம் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். வேனில் இருந்த மதுரை, திருநகர் மாதவன், 42, பால்பாண்டி, 34, ஆகியோர், திருடிக்கொண்டு வந்தது தெரிந்தது. இருவரையும் தேனி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி