கோவில் காளை இறந்ததாக புரளி
சென்னிமலை:சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ள, சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, சுவாமி அபிஷேகத்துக்கு தினமும் பொதி காளை மூலம் படிக்க்டடு வழியாக திருமஞ்சனம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக சென்னிமலை கோவில் தேஸ்தானம் சார்பாக, பொதி காளை பாராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பொதி காளை இறந்து விட்டதாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். கோவில் பற்றி உண்மை தெரியாமல் இதுபோன்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திருமஞ்சனம் கொண்டு செல்ல பராமரிக்கப்படும் மூன்று பொதி காளைகளின் படங்களையும் வெளியிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம் ஆறுதொழுவு கிராமத்தில் சிவன்மலை ஆண்டவர் தீர்த்த காவடி குழுவில் பாராமரிக்கப்பட்ட வந்த காளை இறந்து விட்டது. இதை வைத்து சென்னிமலை கோவில் காளை இறந்து விட்டதாக தகவல் பரவி விட்டது.