மேலும் செய்திகள்
டிராக்டர் மோதி வாலிபர் பலி
05-Jun-2025
அந்தியூர், :அந்தியூர், சங்கராப்பாளையத்தை அடுத்த குருநாதபுரத்தை சேர்ந்தவர் தவசியப்பன், 48; ஐஸ் வியாபாரி. நேற்று அதிகாலை, 4:௦௦ மணிக்கு, பர்கூரில் இருந்து ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் குருநாதபுரம் நோக்கி சென்றார். மூலக்கடை கருப்புசாமி கோவில் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதினார். இதில் சம்பவ இடத்தில் பலியானார்.* வெள்ளித்திருப்பூர் அருகே மாத்துார் அடப்பு தெருவை சேர்ந்தவர் சிதம்பரம், 60, கூலி தொழிலாளி. சின்ன மாத்துாரை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி, 42; மாத்துார், கிழக்குத் தெருவை சேர்ந்தவர் குருசாமி, 50; மூவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில், வெள்ளித்திருப்பூரில் இருந்து பல்சர் பைக்கில் மாத்துார் சென்றனர். பைக்கை நரசிம்மமூர்த்தி ஓட்டினார். அப்போது எதிரே ஸ்பிளெண்டர் பைக்கில் வந்த சங்கராப்பாளையம் அருகேயுள்ள செல்லம்பாளையத்தை சேர்ந்த முருகேசன், 43, மீது பல்சர் பைக் மோதியது. இதில் நான்கு பேரும் காயமடைந்தனர். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிதம்பரம் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இரு விபத்துகள் குறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Jun-2025