கம்ப்யூட்டர் டிசைனிங் பயிற்சி பெற யோசனை
ஈரோடு:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம், பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினம் சார்ந்தவர்களுக்கு 'கம்ப்யூட்டர் எய்டேட் டிசைன், கம்ப்யூட்டர் எய்டேட் மேனுபக்சரிங் கோர்ஸ் அன்ட் இண்டஸ்டரியல் ஆட்டோமேஷன் கோர்ஸ்' பயிற்சி வழங்கப்பட உள்ளது.பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணுவியல் இன்ஜினியரிங் பொறியியல் படிப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டவர்கள், 90 நாட்கள் பயிற்சி பெறலாம். இப்பயிற்சி பெரம்பலுார், சேலம் மாவட்டங்களில் வழங்கப்படும். அங்கு தங்கி படிக்க செலவினத்தொகையை தாட்கோ ஏற்கும். பயிற்சி வழங்கப்படும் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஆரம்ப காலம், 25,000 முதல், 40,000 ரூபாய் வரை வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். தாட்கோ இணைய தளமான, www.tahdco.comஎன்ற முகவரியில் பதிவு செய்து பயிற்சி பெறலாம்.கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலகம், 6 ம் தளத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை நேரில் அல்லது, 0424 2259453 என்ற எண்ணில் அணுகலாம்.