உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விருது, ரொக்கப்பணம் பெற உணவகங்களுக்கு யோசனை

விருது, ரொக்கப்பணம் பெற உணவகங்களுக்கு யோசனை

ஈரோடு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், உணவு பாதுகாப்பு மற்றும் நியமன ஆணையத்தால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல், மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் தன்மை பொருட்களை மட்டும் பயன்படுத்தும் ஓட்டல்களை ஊக்கப்படுத்த, ரொக்க பரிசுடன், விருது வழங்கப்படுகிறது. உரிமம் பெற்ற உணவகங்கள்-2, உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெற்ற சிறு உணவகங்களில், 2 விருதுக்கு தேர்வு செய்யப்படும்.இதில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற ஒரு உணவகம், சான்று பெற்ற ஒரு உணவகம் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். உரிமம் பெற்ற உணவகத்துக்கு, 1 லட்சம் ரூபாய், பதிவு மற்றும் பெற்ற உணவகத்துக்கு, 50,000 ரூபாய் வழங்கப்படும். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி