உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ம.க., வடக்கு மாவட்ட அலுவலகம் திறப்பு

பா.ம.க., வடக்கு மாவட்ட அலுவலகம் திறப்பு

பா.ம.க., வடக்கு மாவட்ட அலுவலகம் திறப்பு பவானி, நவ. 22-பவானியில் பா.ம.க., வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் நடந்த திறப்பு விழாவுக்கு, வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஸ் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்திக், அலுவலகத்தை திறந்து வைத்தார். மூத்த நிர்வாகிகள் பரமசிவம், வெங்கடாசலம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன், மாவட்ட அமைப்பு தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !