உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விட்டு விட்டு பெய்த மழையால் பாதிப்பு ஆசனுார் அருகே காட்டாற்று வெள்ளம்

விட்டு விட்டு பெய்த மழையால் பாதிப்பு ஆசனுார் அருகே காட்டாற்று வெள்ளம்

ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் கொளுத்திய நிலையில், 11:30 மணிக்கு திடீரென பெய்த மழை, 15 நிமிடத்தில் நின்றது. பிறகு, 12:30க்கு துவங்கிய கனமழை, 1:30 வரை நீடித்தது. மதியம், 3:௦௦ மணிக்கு மீண்டும் ஆரம்பித்து, 15 நிமிடம் பெய்தது. விட்டு விட்டு பெய்த மழையால் குடியிருப்பு பகுதி சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது. ஆர்.கே.வி ரோடு, காவேரி ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலையில் வழக்கம்போல் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். அதேசமயம் காலை முதலே விட்டு விட்டு பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. * பவானியில் காலை, 11:௦௦ மணிக்கு பிறகு, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது மழையும் விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. இதனால் மக்கள் அன்றாட பணிகளில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டது.* தாளவாடி மலை ஆசனுாரை அடுத்த தடசலட்டி, இட்டறை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இதனால் தலமலை செல்லும் வழியில் ராமரணை தாசறை பள்ளத்தில் மாலை, 5:00 மணிக்கு காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாலை, 6:30 மணிக்கு வெள்ள நீர் படிப்படியாக குறைந்த பின் வாகனங்கள் செல்ல தொடங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை