உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆதார் மையங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்; அறவே அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

ஆதார் மையங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்; அறவே அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

ஈரோடு: ஈரோட்டில் ஆதார் மையங்களில், மக்கள் கூட்டம் குறையாத நிலையில், அடிப்படை வசதி கேள்விக்குறியாகி உள்ளது. ஆதார் அட்டையை மக்களின் அன்றாட வாழ்வியலில், தற்போது அத்தியாவசியமாக்கி விட்டனர். ஆதார் கார்டில் பிழைகளை திருத்தவும், பிற தேவைகளுக்காகவும், ஆதார் மையங்களுக்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர் செல்வது தற்போது சகஜமாகி விட்டது. ஈரோட்டில் தலைமை தபால் நிலையம், தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் பிழை திருத்தம், முகவரி மாற்றத்துக்கான பணி மேற்கொள்ளப்படுகிறது.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் புதிதாக ஆதார் கார்டு எடுத்தல், மாற்றங்கள் இன்றி புதுப்பித்தல் நடக்கிறது. இதில் எந்த ஒரு மையத்திலும், எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை. குறைந்தபட்சம் மக்கள் அமர போதிய இருக்கை கூட இல்லை. காலை முதல் மாலை வரை நிற்க வேண்டிய நிலை தொடர்கிறது. தினமும் குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே பிழை திருத்தம், முகவரி மாற்றம், புதிய கார்டு பெறுதல் போன்ற பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மக்கள் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அரசு அலுவலர்கள் கவனித்து ஆதார் மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கட்டண விபர பலகையையும் ஆதார் மையங்களில் மக்களுக்கு தெரியும் வகையில் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை