உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் சீரமைப்பு பணி ஆய்வு

வாய்க்காலில் சீரமைப்பு பணி ஆய்வு

கோபி, கோபி அருகே வண்டிபாளையத்தில், கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில், இரண்டு மீட்டர் நீளத்துக்கு பிளவு ஏற்பட்டு, நேற்று முன்தினம் தண்ணீர் வெளியேறியது. நீர்வள ஆதாரத்துறையினர் சீரமைப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கந்தசாமி அடங்கிய குழுவினர், நேற்று மாலை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு அமைச்சர் முத்துசாமி கூறுகையில், ''சிறு துளை வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இதை எளிதாக சரி செய்துவிட முடியும். வரும், 5ம் தேதி காலைக்குள் பணியை முடிக்க முடியும். அதேசமயம் இப்பணிக்காக பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தாமல் தொடர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ