உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண் கடத்தல் கும்பல் மிரட்டல்; கலெக்டர் நடவடிக்கை பாயுமா?

மண் கடத்தல் கும்பல் மிரட்டல்; கலெக்டர் நடவடிக்கை பாயுமா?

புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்த மாதம்பாளையம் பஞ்., மாராயிபாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில், அரசு நிலத்தில் கிராவல் மண் வெட்டி கடத்திய ஹிட்டாச்சி இயந்திரத்தை, கடந்த மாதம், 20ம் தேதி சென்ற விவசாயிகள், மக்கள் சிறை பிடித்தனர். மண் கடத்தல் கும்பல் டிப்பர் லாரிகளுடன் பறந்து விட்டனர். ஆர்.ஐ.,ரகுநாதன், மாதம்பாளையம் வி.ஏ.ஓ., சபரி ஆய்வில், ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் மண்வெட்டி எடுக்கப்பட்டது தெரிந்தது. மண் கடத்தல் தொடர்பாக புன்செய் புளியம்பட்டி போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மண் கடத்தல் கும்பல், தங்களை மிரட்டுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மண் கடத்தலுக்கு தயாரித்த போலி அனுமதி சீட்டு ஆதாரமாக எங்களிடம் உள்ளது. நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதை தெரிந்து கொண்ட மண் கடத்தல் கும்பல், எங்களை மிரட்டுகின்றனர். போலி அனுமதி சீட்டு தொடர்பாக கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி