உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிறந்த பெண் குழந்தை இறந்தது குறித்து விசாரணை

பிறந்த பெண் குழந்தை இறந்தது குறித்து விசாரணை

கரூர், திருப்பத்துார் மாவட்டம், குரும்பேரி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, 25. இவர், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே மூலிமங்கலம் பகுதியில், மனைவி மாணிக்க வள்ளி, 22; என்பவருடன் வாடகை வீட்டில் தங்கி, வேலைக்கு சென்று வருகிறார்.இந்நிலையில் கடந்த, ஒரு மாதத்துக்கு முன்பு மாணிக்கவள்ளிக்கு, எடை குறைந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம், தாய்ப்பால் குடித்து விட்டு தொட்டிலில் துாங்கி கொண்டிருந்த, பெண் குழந்தை திடீரென மயக்கம் அடைந்தது. இதையடுத்து, மாணிக்கவள்ளி பெண் குழந்தையை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே பெண் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். தாய்ப்பால் கொடுத்த போது, மூச்சுத்திணறி பெண் குழந்தை இறந்ததா அல்லது எடை குறைவால் இறந்ததா என்பது குறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை