மேலும் செய்திகள்
1 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
02-Aug-2025
பெருந்துறை, பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில், தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன எஸ்.ஐ., சத்தியசிங் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது துடுப்பதி பிரிவில் மினி ஆட்டோ ஒன்று பழுதாகி நின்றிருக்க, இருவர் சரி செய்து கொண்டிருந்தனர். போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், 20 கிலோ எடையில், 15 மூட்டைகளில், 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வாகனத்துடன் இருவரையும் பிடித்து, பெருந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் வெங்கடேஷ், 34, மணிகண்டன், 35, என்பது தெரிந்தது. கேரள மாநிலம் எர்ணாகுளம் -பரவூரில் தங்கி, பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறோம். சாப்பாட்டுக்கு கொண்டு செல்கிறோம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து விசாரிக்க குடிமை பொருள் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்பு பிரிவினருக்கு, பெருந்துறை போலீசார் தகவல் தெரிவித்தனர்.
02-Aug-2025