உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறப்பு நனைப்புக்கு தண்ணீரா? அமைச்சரை அணுக யோசனை

சிறப்பு நனைப்புக்கு தண்ணீரா? அமைச்சரை அணுக யோசனை

ஈரோடு:பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் போக பாசனத்துக்கு டிச., 15 முதல் ஏப்., 15 வரை பாசனத்துக்கு, சுழற்சியில் முறையில் தண்ணீர் விடவும், முன்னதாக முதல் போக பாசன பகுதிக்கு, 20 நாள் சிறப்பு நனைப்புக்கு தண்ணீர் விட கீழ்பவானி பாசன விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.இதுதொடர்பாக கலெக்டர் கந்தசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. கீழ்பவானி பாசன விவசாயிகள் அமைப்புகளை சேர்ந்த சுதந்திரராசு, ரவி, துளசிமணி உட்பட பலர் பங்கேற்றனர். கோரிக்கைகளை கேட்டறிந்து கலெக்சர் கூறியதாவது: கீழ்பவானி புன்செய் பாசனத்துக்கு டிச.,15 முதல் ஏப்.,15 வரை முறைவைத்து நீர் திறக்க பரிந்துரைக்கப்படும். சிறப்பு நனைப்புக்கு தண்ணீர் விட பரிந்துரை செய்ய இயலாது. இதுபற்றி மாவட்ட அமைச்சரான செங்கோட்டையனை அணுகி பேசுங்கள். அவர் பரிந்துரைத்தால் அரசுக்கு பரிந்துரைக்கலாம். தவிர கீழ்பவானியின் முதல் போக பாசன பகுதியில் எந்தெந்த பகுதிக்கு தண்ணீர் தேவை என்பதை வேளாண் துறை மூலம் விபரங்கள் சேகரித்து டிச., 1க்குள் நல்ல முடிவை கூறுகிறோம்.கொடிவேரி பாசனம், காளிங்கராயன் பாசன பகுதிக்கு முறை தவறி தண்ணீர் திறப்பதாகவும், அவ்வாறு திறக்கக்கூடாது என கூறுவது பற்றி அதிகாரிகளிடம் விசாரிக்கப்படும். இதுபற்றியும் மாவட்ட அமைச்சரான செங்கோட்டையனிடம் பேசுங்கள். இவ்வாறு கூறினார். இதையேற்று விவசாயிகள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை