காகித ஆலையில் தொழிற்பயிற்சி சேர்க்கை ஆணை வழங்கல்
கரூர் :புகழூர் காகித ஆலை (டி.என்.பி.எல்.,) நிறுவன தொழிற் பயிற்சி நிலையத்தில், தொழிற்பயிற்சி சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில், இயக்க உதவியாளர், காகித கூழ் மற்றும் காகிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் (2025---26) கல்வி கற்க விண்ணப்பித்த, 19 மாணவ, மாணவியருக்கு சேர்க்கை ஆணையை, காகித ஆலையின் தலைவர் சந்தீப் சக்சேனா வழங்கினார். நிகழ்ச்சியில், காகித ஆலை முதன்மை பொது மேலாளர்கள் கலை செல்வன், சிவக்குமார், டி.என்.பி.எல்., தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் முருகானந்தம் உள்பட, பலர் உடனிருந்தனர்