ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்
ஈரோடு: தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதன்படி ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் நடந்தது. ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயமனோகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சரவணன், மதியழகன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு, உயர்மட்டக்குழு உறுப்பினர் செல்வராணி போராட்டத்தை தொடங்கி வைத்தனர். உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ரமாராணி, தங்கவேலு, பொதுக்குழு உறுப்பினர் பிரகாசம் உள்ளிட்டோர், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.