உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அலகுமலையில் பிப்.,16ல் ஜல்லிக்கட்டு

அலகுமலையில் பிப்.,16ல் ஜல்லிக்கட்டு

பொங்கலுார்: அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் அலகுமலையில் நடந்தது.வரும் 31ம் தேதி காலை, 7:00 மணிக்கு கால்கோள் விழா நடத்துவது, பிப்., 16ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில துணைச் செயலாளர் அர்ஜுனன், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியம், அமைப்பாளர் பாலசுப்பிரமணி, துணைத் தலைவர் மூர்த்தி, இணைச் செயலாளர் செந்தில்குமார், துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் சண்முகம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை