ஈரோடு தனிஷ்க் ஜூவல்லரியில் நகை மாற்றும் திட்டம் அறிமுகம்
ஈரோடு:டாடா குழுமத்தின் அங்கமான தனிஷ்க் நிறுவனம், பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்திய இல்லங்களில் மட்டும், 25 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தங்கம் வேறு பயனின்றி வீடுகளில் உள்ளபோது, இந்தியாவின் தேவைக்காக ஏறக்குறைய, 99 சதவீத அளவுக்கு, வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்கிறது. நாட்டின் நலன் சார்ந்த சுதேசி, சுயசார்பு பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கவும், நேர்மை, நம்பிக்கை, ஒருமைப்பாட்டுடன் ஒருங்கிணைத்து பார்க்கப்படுகின்றன. கிரிக்கெட் ஆளுமை சச்சின் டெண்டுல்கருடன் தனிஷ்க் இணைந்திருக்கிறது. வரும் அக்.,21ம் தேதி வரை அனைத்து கேரடேஜ்களிலும் (9 கே.டி., குறைந்தளவு வரை) பழைய தங்க நகைகளை மாற்றும் போது பூஜ்யம் பிடித்தம் என்ற சிறப்பு சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.