மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
24-Oct-2025
ஈரோடு, ஈரோடு என்.ஜி.ஜி.ஓ.நகர் நஞ்சகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், 73; ஈரோடு மணிகூண்டில் உள்ள தமிழ்நாடு காதி கிராப்ட் கடை மேலாளர். மது பழக்கம் உள்ளவர். இதனால் மனைவியை பிரிந்து, ஈரோட்டில் ஒரு விடுதியில், 13 ஆண்டாக வசித்தார். இந்நிலையில், 23ம் தேதி மதியம் விடுதி அறைக்குள் சென்றவர், அடுத்த நாள் காலை, 9:30 மணிக்கு பின்னரும் வரவில்லை. பக்கத்து அறையில் இருந்தவர்கள், ஊழியர்கள் சென்று பார்த்தபோது வேஷ்டியால் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்த சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Oct-2025